பொங்கல் பண்டிகையையொட்டி 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சிறப்புக்காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையியில் தமிழ்நாடு அரசு, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட இன்று அனுமதி வழங்கி உள்ளது.
