fbpx

மழையால் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணுக்கு புகார் செய்யவும்…! தமிழக அரசு அறிவிப்பு…!

சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை 29/11/2023 பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1.877 மின்பாதைகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னூட்டம் வழங்கப்பட்டு. பழுதுகளும் சரிசெய்யப்பட்டது.

சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகளில் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேங்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின்கம்பங்கள். 14.187 கி.மீ. மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை மின்னக எண்: 94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால் என்ன.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

Sat Dec 2 , 2023
பருவமழை காலங்களில் போது தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அந்தப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுவதை கேட்டிருப்போம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்றால் என்ன.? அது எவ்வாறு உருவாகிறது. இது மழை பொழிவிற்கு எப்படி காரணமாகிறது.? என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம். பூமியில் எல்லா இடங்களிலும் காற்று பரவி இருக்கிறது.காற்றின் அழுத்தம் பூமியில் இருக்கும் ஒவ்வொரு […]

You May Like