fbpx

கோவை| மதம் சார்ந்த விவகாரங்களில் தீவிர செயல்பாடுகள் உடையவர்களை கண்காணிக்கும் காவல்துறையினர்…..!

கோவை மாநகரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்னர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அந்த பயங்கரவாதி கோவையில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை எடுத்து கோவை மாநகரில் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் என்று சொல்லப்படும் காவல்துறையினர் மற்றும் எஸ் ஐ சி என்று சொல்லப்படும் ரீதியிலான தகவல்களை விசாரித்து வரும் சிறப்பு நுண்ணறிவு விரிவு காவல் துறையினர் உள்ளிட்டோர் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிர படுத்திருக்கிறார்கள். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு எண்ண ஓட்டத்தில் இருக்கின்ற நபர்களை கண்டறிந்து அவர்களுடைய செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அதோடு மதம் சார்ந்த விவகாரங்களில் மற்றும் தாங்கள் மதம் சார்ந்த கொள்கைகளின் தீவிரமாக இருந்து வரும் நபர்களின் செயல்பாடுகளையும் எஸ்.ஐ. சி காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்ததாக 2️ பேரை பிடித்து எஸ்.ஐ.சி காவல் துறையினர் சமீபத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதுவரை காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கண்காணிப்பு பணியை தீவிர படுத்திருக்கின்றோம். சற்றேற குறைய 200 பேரை கண்டறிந்து இருக்கிறோம் படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என்று அனைத்து தரப்பினரும் இதில் அடக்கம் என்று கூறியுள்ளார். இவர்களுடைய செயல்பாடுகள், செல்லும் இடங்கள், செல்போன் அழைப்புகள் போன்ற விவரங்களையும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை இவர்கள் பரப்புகிறார்களா? என்பது தொடர்பாகவும் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Next Post

வாட்ஸ் அப்பில் வந்தது புதிய அப்டேட்..!! இனி வீடியோவும் எடுக்கலாம்..!! பயனர்கள் நிம்மதி..!!

Thu Jun 15 , 2023
வாட்ஸ் அப் மூலமாக நேரடியாக புகைப்படம் மட்டுமே எடுக்கும் வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீடியோ எடுக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பயனாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயனாளர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியாகின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ் […]

You May Like