டெல்லியில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி தனது கணவனின் அந்தரங்க உறுப்புகளை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடக அறிக்கையின்படி, பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் தனது மனைவியுடன் டெல்லியில் குடியேறினார். அங்கு சக்தி நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு, குடிபோதையில் இருந்த நபர், மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கணவர் தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்த பெண், கணவனின் அந்தரங்க உறுப்புகளை கூர்மையான பொருளால் துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
ஆணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு பாரா இந்து ராவ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளுமாறு கணவன் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் தகறாறு ஏற்படவே, மனைவி கணவனின் அந்தரங்க உறுப்பை துண்டித்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், அந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சிறந்த வசதிகளுடன் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Read more ; வறண்ட காலநிலைக்கு பெயர் பெற்ற நாட்டில் இப்படி ஒரு அதிசயமா..? நீங்களே பாருங்க..!!