இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,676ஆக இருந்த நிலையில், இன்று 7,830ஆக உயர்ந்துள்ளது.. கொரோனா காரணமாக மேலும் 16 பேர் இறந்த நிலையில், சிகிச்சை எண்ணிக்கை 40,215ஆக உயர்ந்துள்ளது.. நேற்று 3,761 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று 4,692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,20,66,24,326 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.