fbpx

சட்டம் ஒழுங்கு பிரிவில்… நேர்மை மற்றும் ஒழுக்கமானவர்களை நியமிக்க வேண்டும்.. சென்னை ஐகோர்ட்..!

தமிழக காவல் துறையின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக இருக்கும் முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மனுதாரர்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆனதால், மேலும் மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரிவு போலீசார், போலீஸ் ஸ்டேஷனிலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

சட்டம் – ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது உயரதிகாரிகளின் பொறுப்பு என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

Rupa

Next Post

’மாணவர்களே இலவச பஸ் பாஸ் ரெடி’..! பள்ளிகளுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு..!

Fri Sep 16 , 2022
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் அட்டை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு இதற்கான கட்டணத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் […]
’இனி ஆக்‌ஷன் சீன் தான்’..!! பேருந்து படிக்கட்டில் பயணித்தால்..!! ஓட்டுநர், நடத்துனருக்கு அதிரடி உத்தரவு..!!

You May Like