உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததை காரணமாக காட்டி கண்டித்ததாக சொல்லப்படுகிறது.அதன் பிறகு மாமியாருக்கும் மருமகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலி பேகம் தன்னுடைய மாமியார் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாக தன்னுடைய சகோதரனை கைபேசியில் அழைத்து கூறியுள்ளார்.
குழந்தை பிறக்காததற்காக அந்தப் பெண்ணிடம் அவருடைய கணவர் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சகோதரியின் அழைப்பின் பேரில் அந்த பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் ஆபத்தான நிலையில், இருப்பதை கண்டு சிராத்துவில் இருக்கின்ற ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. அதன் பேரில் அந்த பெண்ணின் சகோதரனான முகமதுவின் புகாரியின் அடிப்படையில் கடதாம் காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நான்கு பேர் மீது கடந்த திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கவ்சாம்பி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பகதூர் சிங் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. திருமணம் ஆகி 15 வருடங்கள் கடந்த பின்னரும் குழந்தை பிறக்காததால் 33 வயது பெண்ணுக்கு அவருடைய மாமியார் விஷம் கொடுத்து கொலை செய்து சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.