fbpx

உயிரிழந்த மனைவியின் உடலை ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்த கணவர்…..! காவல்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்…..!

மத்திய பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி(40). இவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தை கணவர் பரத் ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து உள்ளது.

மனைவி உயிரிழந்ததை வெளியே சொல்லாமல் உடலை வீட்டின் பிரீசரில் கடந்த 3 தினங்களாக வைத்திருக்கிறார் கணவர் பாரத். இந்த நிலையில் மனைவியின் சகோதரர் அபய் திவாரிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் பேரில் பரத் மிஸ்ரா வீட்டிற்கு வந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் உடலை ஃப்ரீசரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சகோதரியின் மரணத்தை அவருடைய கணவர் பரத் மறைத்து வைத்ததாக புகார் தெரிவித்துள்ள அபய், அவர் தாக்கியதில் தான் சகோதரி மரணம் அடைந்திருப்பதாக காவல்துறையிடம் புகார் வழங்கினார். தன்னுடைய மனைவி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக கணவர் பரத் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், இறுதிச் சடங்கிற்கு மகன் வரவேண்டும் என்பதற்காகவே உடலை பிரீசரில் வைத்து பாதுகாத்தேன் என்றும் அவர் வாக்குமூலம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரேத பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் பெண்ணின் மரணத்திற்கான காரணம் என்ன? என்பது தொடர்பான தகவல் வெளியான பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆய்வாளர் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Next Post

நடிகர் ரஜினிகாந்துடன் திமுக மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு..!! அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை..?

Mon Jul 3 , 2023
இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப […]
நடிகர் ரஜினிகாந்துடன் திமுக மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு..!! அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை..?

You May Like