fbpx

அடுத்த 3 மணி நேரத்தில்..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும். டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 4ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இந்த தேதிக்குள் குரூப் 2 தேர்வு முடிவுகள் ரிலீஸ்..!! வெளியான சூப்பர் அப்டேட்..!!

Fri Dec 1 , 2023
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் […]

You May Like