fbpx

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு ஓர் ஆண்டு தடை நீட்டிப்பு…!

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குட்கா மற்றும் பான் மசாலா போன்ற மெல்லக்கூடிய உணவுப் பொருட்களான புகையிலை மற்றும் நிகோடின் போன்ற பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அல்லது விற்பனை செய்வதற்கான தடையை மேலும் ஒரு வருட காலத்திற்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின் விதிகளின்படி, உணவுப் பாதுகாப்பு ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது 2016 ஆம் ஆண்டு தமிழக முழுவதும்,குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2025-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Wanted: ராமலிங்கம் கொலை வழக்கு...! தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு தொகை அறிவித்த NIA...!

Sun May 26 , 2024
2019 ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் முயற்சியை தீவிரப்படுத்தி, கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 நபர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது . கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை போஸ்டர்களை ஒட்டி உள்ளது. மத்திய ஏஜென்சி இதுவரை 19 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொலை வழக்கு தொடர்பாக […]

You May Like