நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29-11-2023 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.