fbpx

மக்களவையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களை “உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” என மிரட்டிய மீனாட்சி லேகி..!

பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடம் ஆமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, மக்களவையிலையே எதிர்க்கட்சி எம்.பி.க்களை “அமலாக்கத் துறை வரும்” என மிரட்டியுள்ள வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி யூனியன் பிரதேச ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் பேசினர். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பா.ஜ.க. பேசிவந்த நிலையில் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியினர் கூச்சலிட்டுள்ளனர், இதனால் கோபமடைந்த மீனாட்சி லேகி, வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என மிரட்டும் தோனியில் கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகியின் வீடியோ தற்போது பேசு பொருளாகி உள்ளது.

Kathir

Next Post

உடலில் உள்ள அதிக அளவிலான யூரிக் அமிலத்தை சுலபமான முறையில் குறைப்பது எப்படி…..?

Fri Aug 4 , 2023
பலருக்கு உள்ளங்கால் விறைத்து போகும் நிலை ஏற்படுவதுண்டு. மேலும் கால் வீக்கம் அதிகரிக்கலாம். அப்படி அதிகரித்தால், அவர்கள் அதிலிருந்து விடுபட பல்வேறு மருத்துவர்களை நாடுவார்கள். ஆனாலும் அந்த வீக்கம் அவ்வளவு எளிதில் குணமாகாது. நாம் அன்றாட வேலைகளை செய்வதிலேயே இதன் காரணமாக, பல்வேறு சிக்கல்கள் எழலாம். அந்த வீக்கத்திற்கு காரணம் என்னவென்றால், உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது தான் அந்த வீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது தற்போது அந்த யூரிக் […]

You May Like