உத்தர பிரதேச மாநிலத்தில் புஷ்பா 2 படம் பார்க்க காதலன் வராத நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்த படக்குழு, அப்படத்தை கடந்த டிசம்பர் 5ந் தேதி திரைக்கு கொண்டு வந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 14 நாட்களில் 1500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.
புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் இந்தியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அங்கு மட்டும் இப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. எந்த ஒரு இந்தி படம் இவ்வளவு பெரிய தொகையை இந்தி வெர்ஷனில் வசூலித்ததில்லை. அண்மையில் அல்லு அர்ஜுன் கைதான பின்னர் புஷ்பா 2 படத்தின் வசூல் 70 சதவீதம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இதனிடையே புஷ்பா 2 பார்க்க காதலன் மறுத்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், காதலி புஷ்பா 2 படம் பார்க்க வற்புறுத்திய நிலையில் காதலன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மோதல் முற்றியது. சண்டை முற்றிய நிலையில், காதலி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக காதலனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more ; மத்திய அரசு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை.. 224 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?