fbpx

7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருக்கும் நாடு..!! அவர்கள் இவ்வளவு பணக்காரராக காரணம் என்ன தெரியுமா? 

உலகில் வாழும் பெரும்பாலானோருக்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும், தேவையும் இருக்கும். ஆனால் சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு எதிர்பார்க்கும் செல்வம் கிடைப்பதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகில் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழும் பணக்கார நாடுகள் முதல் அன்றாட உணவுக்கு அல்லல்படும் ஏழை நாடுகள் வரை உள்ளன. இங்கு நாம் பார்க்க போகும் நாட்டில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக உள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தான் அந்த கோடீஸ்வர நாடாகும்.

சுவிட்சர்லாந்து ஒரு அழகான தேசம் மட்டுமல்ல, ஒரு பெரிய உலகளாவிய நிதி மையமாகவும் உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மில்லியனர்கள் உள்ளனர். சமீபத்தில், தொழில்முனைவோர் தர்ஷன் என்பவர் சுவிட்சர்லாந்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தினார். அதில், “சுவிட்சர்லாந்தில், 7 பெரியவர்களில் ஒருவர் கோடீஸ்வரர்.

இது அமெரிக்காவை விட 5 மடங்கு அதிக பணக்காரர்கள் இந்த நாட்டில் தான் இருக்கிறார்களாம். அமெரிக்காவில் 65% பேர் சொந்த வீடுகளைக் கொண்டிருந்தாலும், ஸ்விஸ்  நாட்டில் 41% பேர் மட்டுமே வீடுகளை வைத்திருக்கிறார்கள். பல ஸ்விஸ் மில்லினியல்கள் வாடகைக்கு விட விரும்புகின்றனர் மற்றும் வீடுகளை வாங்காமல் சேமிக்கும் பணத்தை அதிக மகசூல் தரும் முதலீடுகளில் முதலீடு செய்கின்றனர். இது அவர்களின் செல்வத்தை விரைவாக வளர்க்க உதவுகிறது.

இதற்கு அங்கு உள்ளவர்கள் தொடர்ந்து பல்வேறு தளங்களில் முதலீடு செய்வது தான் முக்கியமான காரணமாகும். பாரம்பரியமாகவே சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் சேமிப்பு முறையை பின்பற்றி வருகின்றனர். தங்களது வருமானத்தில் குறைந்தது 30 சதவீதத்தை சேமிக்கும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். தனிப்பட்ட வளர்ச்சிக்கு தங்களது வருமானத்தில் அதிகபட்சமாக 10% வரை அவர்கள் முதலீடு செய்கின்றனர். தொழில்நுட்பம் கல்வி அறிவு நிதித்துறை ஆகியவற்றிலும் அவர்களுக்கு அபாரமான அறிவாற்றல் உள்ளது. இது போன்ற காரணங்களால் சுவிட்சர்லாந்து நாட்டில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்,

Read more ; வாரம் 5 நாள் மட்டுமே வேலை.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க ரெடியா?

English Summary

In this particular country, 1 in 7 people are millionaires. It is not America, China or England.

Next Post

மக்களே இது தெரியுமா..? ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க..!!

Tue Aug 20 , 2024
The amount of water coming out of the AC is also likely to be high. Do you know that we can use such water in many ways..?

You May Like