fbpx

மேஷம் முதல் மீனம் வரை… நாளைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அனைத்து ராசிகளுக்கும் நவம்பர் 26 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

மேஷம் : மேஷம் ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இன்று கவனம் செலுத்த வேண்டும். கோபமாக அல்லது அவசரமாக எந்த முடிவும் எடுக்க முயற்சிக்காதீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் காதல் உறவில் ஏற்படும் சிக்கலால் மன அழுத்தம் இருக்கலாம். 

ரிஷபம் : ரிஷபம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உடன் செயல்பட வேண்டிய நாள். ஆனால் தன்னடக்கத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினர் உடன் வாக்குவாதம் வேண்டாம். அமைதியை கடைப்பிடிக்கவும். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில்  ஆன்மீக நாட்டம் கூடும்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்கள் நீங்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பு மூலம் சாதகமான் பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள். நிலம் சம்மந்தமான ஏதாவது காரியம் நடந்து கொண்டிருந்தால் அது இன்று முடியாமல் போகலாம். உங்களுக்கு தேவையான விஷயங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், மற்றவர்களை நம்புவது சரியல்ல. திருமண உறவில் பிரச்சனைகள் நீங்கி, கணவன் மனைவிக்கிடையே சுமுகமான உறவு உருவாகலாம்.

கடகம் : கடகம் ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்படுவார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு செல்வீர்கள். சிலரிடம் இருந்து ஆடைகளை பரிசாக பெறுவீர்கள். அலுவகலத்தில் செல்வாக்கு கூடும். 

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். சிக்கல்கள் இருந்தாலும் மனம் கலங்காமல் இருக்கும். பேச்சில் தெளிவும், நிதானமும் தேவை. ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தந்தை வழியில் அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படலாம். செயலில் பொறுமையாக இருங்கள். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்த நாள். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாய் வழியில் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகள் உண்டாகும். நம்பிக்கை குறைவு ஏற்படும். பொறுமையாக இருங்கள். தொழிலில் முதலீடு செய்யலாம். தொழில் விஷயமாக  வெளியூர் பயணம் உண்டாகும். பணியிடங்களில் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.தனுசு

தனுசு : தனுசு ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வெற்றியின் காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். ஆன்மிக நடவடிக்கைகளிலும் நேரம் செலவிடப்படும். இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆபத்தான பணிகளை தவிர்க்கவும். அரசாங்க வேலையில் ஓரளவு வெற்றி பெறுவீர்கள். கடுமையான வேலைகளுக்கு மத்தியில், ஓய்வுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

மகரம் : மகரம் ராசிக்காரர்கள் இந்த நாளில் மகிழ்ச்சி உடன் இருப்பீர்கள். சில நேரங்களில் தன்னம்பிக்கை குறைவு ஏற்படலாம். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாபம் அதிகரிக்கும்.

கும்பம் : கும்பம் ராசிக்காரர்களுக்கு சில சிக்கல்கள் தடங்கள்கள் உண்டாகலாம். சில நேரங்களில் நம்பிக்கை குறைவு ஏற்படும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பழைய நண்பர்களை சந்தித்து பேசுவீர்கள்.

மீனம் : மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சற்று பணிச்சுமைகள் நிறைந்ததாக இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையில்லாத கோபத்தை தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகன வசதியில் குறைவு ஏற்படலாம். முன்னேற்ற பாதை அமையும்.

Read more ; திமுகவின் இரட்டை வேடம்… பாமக நிறுவனர் ராமதாஸூக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை…!

English Summary

In this post we will see how November 26th will be for all zodiac signs..

Next Post

ஹெஸ்புல்லாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்துள்ளதா? - இஸ்ரேல் தூதர் தகவல்

Mon Nov 25 , 2024
Has Israel struck ceasefire deal with Hezbollah? Netanyahu's spokesperson breaks silence

You May Like