ஜெமினி கணேசனுக்கு ’சாம்பார்’ என்ற பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர்தான் ஜெமினி கணேசன். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர், இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் கோலோச்சிய காலகட்டத்தில் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் ஜெமினி கணேசன். அதன் காரணமாக அவருக்கு காதல் மன்னன் என பெயர் வந்தது. ஜெமினி கணேசன் சினிமாவில் மட்டுமல்லாது ரியல் லைஃபிலும் ஒரு காதல் மன்னனாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு அவர் செய்த 4 திருமணங்களே சான்று.
காதல் மன்னன் : ஜெமினி கணேசன் முதலில் அலமேலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மொத்தம் நான்கு மகள்கள். அதில் ரேவதி, கமலா செல்வராஜ், ஜெயலட்சுமி ஆகிய மூன்று பேரும் மருத்துவர்கள், மற்றொரு மகள் நாராயிணி பத்திரிகையாளராக பணியாற்றினார். அதேபோல் ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவியான புஷ்பவல்லிக்கு ரேகா, ராதா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ரேகா பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
நடிகை சாவித்ரி தான் ஜெமினி கணேசனின் மூன்றாவது மனைவி, இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்கிற மகளும், சதீஸ் குமார் என்கிற மகனும் உள்ளனர். ஜெமினினி கணேசனின் நான்காவது மனைவி பெயர் ஜூலியானா ஆண்ட்ரூ, இவர்களுக்கு குழந்தை இல்லை
பெண்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என அவரே பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்த வகையில், காதல் மன்னன் என்ற பட்டம் இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த காலத்தில் இவருக்கு சாம்பார் என்ற மற்றொரு பெயரும் கூட உண்டு. ஆம், இவருடைய பெயரை குறிப்பிடாமல் ரசிகர்களும், மக்களும் சாம்பார் என பரவலாக அழைத்து வந்தனர். இதற்கு காரணம் அப்பொழுது அவர் பெயரைக் கெடுப்பதற்காக சிலர் அந்த பெயரை பயன்படுத்தி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அவரை சாம்பார் என்று அழைப்பதற்கான காரணமே வேறு.
சாம்பார் : ஜெமினி கனேசனின் மகள் அளித்த பேட்டியில், “எனது தந்தை மிகவும் அழகாக இருப்பார். அதுமட்டுமின்றி அவர் ஒரு ஃபிட்னஸ் ஃபிரீக். அதனால் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இருப்பினும் அவர் அசைவம் சாப்பிடமாட்டார். அவர் ஒரு சைவ பிரியர் என்பதனால் அனைவரும் அவரை சாம்பார் என்று கூப்பிடுவார்கள்” என கமலா செல்வராஜ் கூறி இருக்கிறார்.
Read more ; ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..’ தமிழ் சினிமாவில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் பாடல்கள்..!!