fbpx

Tiruchirapalli: கணவரை தாக்கிய கள்ளக்காதலன்.! ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு.!

திருச்சி (Tiruchirapalli) அரியமங்கலம் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் லோடுமேன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உக்கட மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(42). இவர் லோடுமேனாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சூர்யா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணக்குமாரின் மனைவி வீட்டில் இருந்து காணாமல் போய் இருக்கிறார். இது தொடர்பாக சரவணக்குமார் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சரவணகுமாரின் மனைவியை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சரவணகுமார் திருச்சி நகரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் சூர்யா சரவணகுமாரை சரமாறியாக தாக்கி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

English Summary:
Near Tiruchirapalli woman’s husband was attacked by her lover.police registered the case and begin investigation.

Next Post

̓"ஏழைகளின் கனவே என் கனவு.. மக்களின் சேவைக்காகவே பிரதமராகிறேன்" - டெல்லி பாஜக மாநாட்டில் பிரதமர் 'MODI' நெகிழ்ச்சி.!

Sun Feb 18 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிட இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வர இருக்கின்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. மேலும் பாரதிய ஜனதா […]

You May Like