வருமான வரி செலுத்துவோர் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்க்கும் சேவையை வருமான வரித்துறை ஆணையம் புதிதாக கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில், வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அதாவது, மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனாலும் சிலர் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்.. எனவேதான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தருவோருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.1 கோடி வரை பரிசு அளிக்கப்படுகிறது.
இதேமாதிரி, வரவு செலவு கணக்கை, “இ – வெரிபிகேஷன்” செய்யும், புதிய சாப்ட்வேர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, புதிய சாப்ட்வேரையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது அடுத்த நொடியே தூங்கிடலாம் Saudi Arabia -வின் கனவு Neom City -க்காக வதைபடும் மக்கள்…என்ன நடக்கிறது? இதற்கெல்லாம் காரணம், மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடப்பதால், இதனை கண்டுபிடிக்கவே, இப்புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால், மாத சம்பளதாரர்கள் போலி ரசீதை கொடுத்து தப்பிக்க வாய்ப்பிருக்காது.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு அதிரடியை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.. மற்ற துறைகளில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுவதுபோலவே, வருமாவரித்துறைக்கும் இப்படியான குறைதீர்க்கும் மாதம் அறிமுகமாகிறது.. இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலக இணை ஆணையர் பி.எம்.செந்தில் குமார் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில், வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாக தீர்வு காண்பதற்காக, வருமானவரித்துறை கடந்த மாதம் 22-ம் தேதி முதல் இம்மாதம் 22-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு “குறை தீர்க்கும் மாதமாக” அனுசரிக்கிறது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயிலில் நாளை ட்ரவல் பண்ன போறீங்களா.. இதை நோட் பண்ணிக்கோங்க இணையதளங்கள: இந்த மாதத்தில், “சிபிகிராம்” மற்றும் “இ-நிவாரண்” ஆகிய தளங்கள் மூலம் இணைய வழியாகவும், பிற முறைகளின் மூலமாகவும், வரி செலுத்தும் நபர்கள் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாக தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் விரும்பினால், தங்கள் அதிகார வரம்பு மதிப்பீட்டு அதிகாரிகள் மற்றும் அவர்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து குறைகளுக்கு தீர்வு காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் வருமானவரி செலுத்துவோர், ஏப்ரல் 24-ம்தேதி முதல் மே 22-ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சந்தித்து குறை களைப் பெற்று, அதை தீர்க்க வழி செய்யப்பட்டுள்ளது. 94454 67500 என்ற மொபைல் போன் மூலமும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More: ஒரே நாளில் ரூ.14,000 கோடி..!! 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனை..!! களைகட்டிய அட்சய திருதியை..!!