fbpx

வருமான வரி தாக்கல்!… ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால்!… வெளியானது முக்கிய அறிவிப்பு!

வருமான வரி செலுத்துபவர்கள் நடப்பு நிதி ஆண்டுக்கான தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேவையான வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் தாமதமாக செலுத்தும் அபராத தொகையுடன் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கூடிய விரைவில் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, இதுவரை தனிநபர்கள், நிறுவனங்கள் என 7.4 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளன. இது 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் நடப்பு நிதி ஆண்டுக்கான தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேவையான வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் தாமதமாக செலுத்தும் அபராத தொகையுடன் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் தங்களின் வருமான வரியை செலுத்தலாம். ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாயை தாண்டவில்லையென்றால் அவர்கள் தாமத கட்டணம் ஆயிரம் ரூபாய் மட்டும் எனவும் வருமான வரியில் ஏதாவது நிலவைத் தொகை வந்தால் அவர்களுக்கு கூடுதல் வருமான வரி வசூல் செய்யப்படும் எனவும் வருமான வரித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Kokila

Next Post

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்!… இனி வீடுகளில் கழிவுநீர் தேங்கினால் ரூ.5000 அபராதம்!

Sun Jul 30 , 2023
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் களைவு நீரை தேங்காவிட்டால் வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் டெங்கு காய்ச்சல் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் […]

You May Like