2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை மொத்தம் 6.5 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத வரி செலுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும். காலக்கெடுவிற்குள் வருமான வரியை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு டிசம்பர் 31, 2023 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
6.5 கோடி பேரில் 53.67 லட்சம் பேர் முதல் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 16.1% அதிகமாக உள்ளது. இந்நிலையில் வரி செலுத்தியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது, சிலருக்கு ரீஃபண்ட் தொகை ரூ.15,490 வரவு வைக்கப்பட்டதாக இணையத்தில் குறுஞ்செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. அத்தகைய செய்தி போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் கண்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.