சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ”மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை. போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு காவல் ஆய்வாளரும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் இருக்கக் கூடாது என உறுதி ஏற்றால் இந்த போதை பொருள் பயன்பாட்டை ஒழித்திட முடியும்.

எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதிகமாக போதைப்பொருட்கள் விற்பனையாகும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி-கல்லூரிகள் அருகே அணையில் விற்கக் கூடியவை தடுக்க வேண்டும். அரசு இது தொடர்பான சட்டங்களை கடமையாக்க முடிவு எடுத்துள்ளது. போதைப் பொருட்கள் விவரம் செய்யக்கூடியவர்கள் சொத்துக்கள் அனைத்தையும் முடிக்க முடிவெடுத்துள்ளோம். சட்டத்தை மீறுகின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது. போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை. போதைப் பொருட்களை தடுக்க வேண்டுமென்று சொல்வதற்கு காரணம் சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான். போதை பொருட்கள் பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும், சொந்தங்களோடு பேசுங்கள். குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள் எந்த காரணத்திலும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள்”. இவ்வாறு அவர் பேசினார்.