fbpx

பத்திர பதிவு அலுவலகங்களில் ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரிப்பு…!

பொங்கலை முன்னிட்டு 31.01.2024 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.

குறிப்பாக, நேற்று முன்தினம் மட்டும் 21,004 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. புதிய கூட்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஜனவரி 22-ம் தேதி சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

12ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே விளையும் பூமி சர்க்கரைவள்ளி கிழங்கு.! இவ்வளவு நோய்களை தீர்க்குமா.!?

Wed Jan 24 , 2024
மலைப்பிரதேசங்களில் விளையும் மருத்துவ குணமிக்க கிழங்கு வகைகளில் முக்கியமானது பூமி சர்க்கரைவள்ளி கிழங்கு. குறிப்பாக கர்நாடகா, கொல்லிமலை, ஆந்திரா போன்ற பகுதிகளின் மலைப்பிரதேசங்களில் இந்த கிழங்கு அதிகமாக விளைகிறது. அதிக மருத்துவ குணம் உள்ள பூமி சக்கரவள்ளி கிழங்கை, நம் முன்னோர்கள் செயற்கையான மருத்துவம் இல்லாமல் சாப்பிட்டு நீண்ட ஆயுள் வாழ்ந்தனர். பூமி சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள சத்துகளையும், சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்தும் பார்க்கலாம்? இந்த பூமி சக்கரை […]

You May Like