fbpx

விலை உயர்வு..!! தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு..? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி விலை கிலோ ரூ.12 வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக அறுவடை காலமான ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் தான் அரிசி விலை குறையும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.

நெல் விளைச்சல் குறைவாக இருக்கும் நிலையில், அரிசியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் தற்போது வரையிலும் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார். இதனால் வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விஜய்க்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!! திடீரென உள்ளே நுழைந்த முதல்வர் ஸ் டாலின்..!! வைரலாகும் பதிவு..!!

Fri Feb 2 , 2024
‘ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகட்டும்’ என நடிகர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று துவங்கியுள்ளார். அவரது அரசியல் கட்சி அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக மக்களைச் […]

You May Like