fbpx

ஜனவரி-1 முதல் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு – முதல்வர் அறிவிப்பு

நேற்று (டிசம்பர் 3) மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் விழாவில் பேசிய அவர் ” மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது, இந்த ஓய்வூதியமானது ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். மேலும் வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ரூ.1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் (WFH) என்ற சூழலை உருவாக்க உள்ளோம் என்றும் இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது” என முதல்வர் முக.ஸ்டாலின் கூறினார்.

Kathir

Next Post

கேன்சரை உருவாக்கும் இஞ்சி, பூண்டு விழுது.. சமையலுக்கு பார்த்து பயன்படுத்துங்கள்..!

Sun Dec 4 , 2022
இறைச்சி உணவிலும் மற்றும் பல சமையல்களில் சுவையை கூட்டுவது இந்த இஞ்சி பூண்டு விழுது தான். இஞ்சி பூண்டு விழுதானது தற்போது பாக்கெட்டுகளில் இருப்பதை வாங்கி உபயோகித்து வருகிறோம்.  ஆனால் வீட்டிலேயே அரைத்து அதனை சமையலுக்கு உபயோகிப்பது தான் சமையலுக்கு உண்டான கூடுதல் ருசியை தருவதோடு உடலுக்கு மிகவும் சிறந்தது. தற்போது காலகட்டத்தில் ரெடிமேடாக இருக்கிறது என்று பாக்கெட்டுகளில் இருக்கும் இஞ்சி பூண்டு விழுதை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் என்னென்ன […]

You May Like