fbpx

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா, H3N2 வைரஸ் பாதிப்பு… நுரையீரல் ஆரோக்கியத்தை எப்படி வலுப்படுத்துவது..?

இந்தியாவில் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று மற்றும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. கொரோனா, H3N2 என இரண்டு நோய்த்தொற்றுகளும் நுரையீரலைப் பாதிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. எனவே, நமது நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும்.. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் நமது நுரையீரலை வலுப்படுத்தவும் இந்த வைரஸ் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

நமது அன்றாட உடல் செயல்பாடுகளுக்கு நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது… நாம் சுவாசிப்பதற்கும், இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், நாம் சுவாசிக்கும்போது கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதற்கும் நுரையீரல் உதவுகிறது.. இது தவிர, அவை பிஹெச் அளவை சமநிலைப்படுத்தவும், உதவுகின்றன.

கொரோனா, H3N2 இந்த இரண்டு வைரஸ் தொற்றுகளும் நுரையீரலைத் தாக்குகின்றன மற்றும் கடுமையான தொற்று ஏற்பட்டால் சுவாசப் பிரச்சனைகள் அல்லது நிமோனியா தொற்று ஏற்படுகிறது.. பொதுவாக வைரஸ் நாம் சுவாசிக்கும் போது நீர்த்துளிகள் மூலம் உடலுக்குள் நுழைந்து நமது நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்லக்கூடும். எனவே கடுமையான சுவாச கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.. இதனால் நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது அவசியமாகிறது..

புகைபிடிப்பதை தவிர்ப்பது : புகைபிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வு நுரையீரலை நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கிறது. இது சுவாச நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே கட்டாயம் புகைப்பிடிப்பை தவிர்க்க வேண்டும்…

உடல் செயல்பாடு: வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகாவில் ஈடுபடுவது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாக செயல்படவும் மிக முக்கியமானது. விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், ஆகியவை மூலம் உடற்பயிற்சியை தொடங்கலாம்…

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி: ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் திறனை விரிவுபடுத்தவும், சுவாச தசை வலிமையை மேம்படுத்தவும் உதவும்.

தூக்கம்: 7 முதல் 8 மணி நேரம் நல்ல தரமான தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம். நல்ல தூக்கத்தின் மூலம் பல நோய்களை தடுக்கலாம்.. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு: நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய ஒரு சீரான உணவு பொருட்கள் உதவும். சிட்ரஸ் பழங்கள் மற்றும் இலை கீரைகளில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஒருவர் முகத்தை அதிகமாக தொடுவதை தவிர்க்க வேண்டும்.

Maha

Next Post

ஐபோனை இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்க முடியுமா..? ரூ.12 ஆயிரம் வரை சலுகை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Apr 10 , 2023
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களது சந்தையை விரிவுபடுத்துவதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனங்களின் ப்ராடக்டுகளில் ஐபோனிற்கு என தனியாக சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ஐபோன் 14 மஞ்சள் நிற வெர்ஷன் தற்போது ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வந்துள்ளது. விற்பனை விலையை விட கிட்டத்தட்ட 12 ஆயிரம் வரை சலுகை விலையில் வாடிக்கையாளர்களால் ஐபோன் 14 […]
ஐபோனை இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்க முடியுமா..? ரூ.12 ஆயிரம் வரை சலுகை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like