fbpx

உங்கள் பற்கள் இப்படி இருந்தால், வாய்ப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது!!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு பழக்கங்கள் காரணமாக மனிதனின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் என்னிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. அந்த வகையில், உலகளவில் வாய்ப்புற்றுநோயில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால், வரும் 2030க்குள் வாய்ப்புற்று நோயில் இந்தியா முதன்மை நாடாக மாற வாய்ப்புள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, வாய்ப்புற்றுநோய் என்பது வாயில் மட்டும் வரக்கூடியது இல்லை. வாய்புற்று நோய், முகம், வாய், நாக்கு, தாடை, தொண்டை போன்ற பகுதிகளையும் பாதிக்கும். இந்த புற்றுநோய் ஆண்களைத் தான் அதிகம் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஆண்களுக்கு இருக்கும் புகைப்பழக்கம் மற்றும் குடி பழக்கம் தான். பொதுவாக, புகை பிடிப்பவர்களுக்கு 10 அல்லது 15 பதினைந்து ஆண்டுகள் கழித்து புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு, 1 அல்லது 2 ஆண்டுகளுக்குள்ளாகவே புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இது மட்டும் இல்லாமல், கூர்மையான பற்கள் இருந்தாலோ, அதிக காரமான மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டாலோ வாய்ப்புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை தான் ஆங்கிலத்தில் SSSS (smoking, sharp tooth, spicy food, spirt) என்று சொல்வார்கள். இன்றைய காலகட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இது போன்ற பழக்கம் உள்ளதால் இளம் வயதிலேயே பலரும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாய்ப்புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே எந்த அறிகுறியும் இல்லாததால், நோய் முற்றிய நிலையில் தான் பலர் மருத்துவரை அணுகுவது உண்டு. இதனால், அவர்களை காப்பாற்றுவது மிக கடினம்.

வழக்கத்துக்கு மாறாக எச்சில் நிறைய சுரப்பது, வாரக் கணக்காக ஆறாமல் இருக்கும் புண், குரலில் வித்தியாசம், ஈறுகளில் காணப் படும் நாள்பட்ட வீக்கம், கழுத்துப் பகுதியில் நெறிகட்டிகள் போன்று அறிகுறிகள் ஏதாவது இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Read more: புற்றுநோய் செல்களை அழிக்கும் பூசணி விதை.. எக்கச்சக்க மருத்துவ மகிமை இருக்கு..!! தெரிஞ்சுக்கோங்க..

English Summary

increasing number of mouth cancer in india

Next Post

ஆண்களே இந்த ஒரு பொடி போதும், உங்க உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.. டாக்டர் அட்வைஸ்..

Tue Jan 28 , 2025
home remedy for men's health issues

You May Like