fbpx

அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு.. குழந்தைகளிடம் மன நோய்கள் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்..

மொபைல் போன்கள் இன்று அனைவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாகிவிட்டன.
அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது..

இந்தியாவில் 73% குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்துவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர்களுக்குள் மனச்சோர்வு, பயம் , கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.. ஆன்லைன் கேம், யூ டியூப் வீடியோ, சமூக வலைதளங்கள் என அதிக நேரம் குழந்தைகள் செல்போனொல் செலவழிக்கின்றனர்..

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதாகவும், அவர்கள் யாரிடமும் பேசுவதில்லை என்றும், முடிந்த வரை குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..

ஆனால் மறுபுறம், வெளி நாடுகளில் செல்போன் மோகம் குறைந்துவிட்டது, குறிப்பாக அமெரிக்காவில் 32 சதவீத குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது..

Maha

Next Post

காவல்துறை; புகார் கொடுக்க வருபவர்களிடம்... கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்... டி.ஜி.பி. சைலேந்திரபாபு..!!

Sat Sep 10 , 2022
காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறியுள்ளது:- புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார் அளிப்பவர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சில காவல் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கின்றனர். புகார்தாரர்கள் சில சமயங்களில் உயர் அதிகாரிகளை சந்தித்திருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது. புகார் அளிப்பவர்களிடம் துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது […]

You May Like