பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அமைந்திருக்கிறது வாகா எல்லை. இந்த பகுதியில் இருநாட்டு எல்லை பாதுகாப்பு வீரர்களும் சந்திக்கும் ஒரு பகுதியாக திகழ்கிறது.
இந்த எல்லை பகுதியில், இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசிய கொடியை மாலை சமயத்தில் இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமானதாக இருக்கும். இந்நிலையில் தான், நாட்டின் சுதந்திர தினமான இன்று இந்திய வீரர்கள் வீரத்துடன், நடைபோட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.
வாகா எல்லையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி, தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை கண்டு களித்தனர். வழக்கமான கொடியிறக்க நிகழ்வோடு, கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நாட்டின் முப்படையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பு அணிவகுப்பு நடத்தினார்கள். கடைசியாக நாட்டின் தேசியக்கொடி தரையிறக்கப்பட்டது.