fbpx

8 முக்கிய தொழில் துறைகளில் குறியீட்டு எண் 3.6 சதவீதமாக அதிகரிப்பு…! மத்திய அரசு தகவல்…!

எட்டு முக்கிய தொழில் துறைகளில் குறியீட்டு எண் மார்ச் 2022ஐ ஒப்பிடுகையில், மார்ச் 2023-ல் 3.6 சதவீதமாக அதிகரித்தது.

அதன் படி, நிலக்கரி, உரம், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, மார்ச் 2023-ல் அதிகரித்தது. நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புப் பொருட்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகள் தொழில் உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

நிலக்கரி உற்பத்தி 12.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், உரங்களின் உற்பத்தி 9.7 சதவீதமும், எஃகு உற்பத்தி 8.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தி 2.8 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 0.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 1.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட, 2023 மார்ச் மாதத்தில் உற்பத்தி குறைந்தது

Vignesh

Next Post

காதலனை கரம் பிடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….! உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்….!

Sun Apr 30 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னுடைய காதலனை இரண்டாவதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டபடியால் சுனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு கூறியதால் சுமிதா தன்னுடைய காதலனுடன் […]

You May Like