கடந்த 01.10.2022 அன்று முதல் நம் நாட்டில் 5-ஜி சேவைகளை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. மேலும் 31.01.2023 தேதி நிலவரப்படி, 238 நகரங்களில் 5-ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிமம் சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5-ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை ஏலம் நடவடிக்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.