fbpx

“இந்தியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது” –பிரதமர் மோடி

வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஏப். 9) சென்னை வந்தார். அதனைத்தொடர்ந்து இன்று வேலூர் வந்த பிரதமர் மோடி, பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கே.பாலு, செளமியா அன்புமணி, கே.எஸ்.நரசிம்மன், அஸ்வத்தாமன், கணேஷ்குமார் ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் புத்தாண்டில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது. வரலாறு, புராணம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வேலூரை நான் வணங்குகிறேன். முருக பெருமானை நான் வணங்குகிறேன்.

2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாக பார்த்தது. செய்தித்தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன. உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது. விண்வெளி துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.

ஹிந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுகவும் சநாதானத்தை அழிப்பேன் என்று பேசியுள்ளது. பெண்களுக்கு மரியாதை அளிக்காத கட்சி திமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எப்படி அவமானப்படுத்தினார்கள் என்று நமக்கு தெரியும். திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது தான். நாங்கள் பெண்களுக்கான மரியாதையை மீட்டுக் கொடுப்போம்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இலங்கையில் இருந்து பாஜக  மீட்டு கொண்டு வந்தது. கச்சத்தீவை இலங்கைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தாரை வார்த்தன. மீனவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் துரோகம் செய்கிறது. கச்சத்தீவை யாருக்காக அவர்கள் இலங்கைக்கு கொடுத்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் காங்கிரசும், திமுகவும் அதுபற்றி பேசுவது இல்லை” எனக் குறிப்பிட்டார்.

Next Post

AC-யை 25-27 டிகிரி செல்சியஸில் வைத்து பயன்படுத்துங்கள்..!! மின்சார வாரியம் வேண்டுகோள்..!!

Wed Apr 10 , 2024
AC கருவியை 25-லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில், பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தினமும் வெயில் அடிக்கிறது. மேலும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக தினமும் வெயிலின் […]

You May Like