fbpx

“வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதி!!” ; பிரதமர் மோடி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை, இந்தியாவின் கிழக்கு நாடுகளுக்கான செயல் கொள்கை, விஷன் சாகர், இந்தோ – பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் சங்கமத்தில் வங்கதேசம் அமைந்துள்ளது. கடந்த ஓராண்டில், மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய திட்டங்களை நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

பெரிய முயற்சியை ஒரே வருடத்தில் பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. இது இரு நாட்டு உறவுகளின் வேகத்தையும் அளவையும் பிரதிபலிக்கிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கவுள்ளது. வங்கதேசத்தின் வடமேற்குப் பகுதி மக்களின் வசதிக்காக ரங்பூரில் புதிய துணை தூதரகத்தை திறப்பதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம்.

வங்கதேசம் இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சி பங்காளியாகும். வங்கதேசத்துடனான உறவுகளுக்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். தொடர்ந்து, . இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே டி20 உலகக் கோப்பை 2024 போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Read more ; “வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதி!!” ; பிரதமர் மோடி அறிவிப்பு

English Summary

India announces e-medical visa for Bangladeshis, new embassy in Rangpur after Modi-Hasina talks

Next Post

IndiaAI மிஷன் | 2 லட்சம் வரை பெல்லோஷிப்!! மாணவர்களை பரிந்துரைக்க நிறுவனங்களுக்கு அழைப்பு!!

Sat Jun 22 , 2024
IndiaAI Mission has been launched with a budget of Rs 10,372 crore. The mission offers scholarships up to 2 lakh to eligible students. Here’s all you need to know.

You May Like