பெண்களுக்கான கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சர்வதேச ‘கோ கோ’ கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக ‘கோ கோ’ உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் டெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கும் கோ கோ உலகக்கோப்பையில், 20 ஆண்கள் அணிகள் மற்றும் 19 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மொத்தமுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதனைத்தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என நடைபெற்று இறுதிப்போட்டியானது நேற்று நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பையை வென்றது. முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.கோ கோ உலகக்கோப்பையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளது.