fbpx

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு…! ஆர்வம் உள்ள நபர்கள் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்….!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

விண்ணப்பதாரர் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு 7th CPC என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நவம்பர் 8ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_10072022_MMS_Eng.pdf

Vignesh

Next Post

தொடர் கனமழை..!! வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

Mon Oct 17 , 2022
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, இறங்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த […]

You May Like