ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என உலகக்கோப்பை போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா அணி இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். பிறகு தன்சித் ஹாசன் 51 ரன்கள் எடுத்து அட்டமிழந்த பிறகு பின்னர் களமிறங்கிய ஷாண்டோ 8, மெஹிதி ஹசன்3 என மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு பக்கம் நிதானமாக ஆடிய லிட்டன் தாஸ் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்பு வந்த அட்டகாரர்கள் அனைவரும் சொதப்ப, முஷ்பிகுர் ரஹீம் 38 மற்றும் முகமது 46 ரன்கள் எடுத்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.
257 ரன்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின்துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 48 ரன்களுக்கும், சுப்மன் கில் 56 ரன்களும், ஒரு பக்கம் கோலி நிதானமாக ஆட, ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். இறுதி வரை அதிரடி காட்டிய கோலி 103 ரன்களிலும், கே.எல்.ராகுல் 37 ரன்களிலும் அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். இந்திய அணி 41.3 ஒவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த உலக கோப்பை போட்டியில் 4 தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் 2வது இடத்தை தக்க வைத்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி முதல் இடத்தை பிடித்து வருகிறது.