fbpx

ஒரே சீசனில் 18 தங்கம் வென்று புதிய சாதனை படைத்த இந்தியா!… ஈட்டி எறிதலில் நம்பிக்கை நாயகன் நீரஜ் சோப்ரா அபாரம்!

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மட்டும் 12 பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11 வது நாளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோன்று கிஷோர் குமார் வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார்.

இதுபோன்று 35 கிலோமீட்டர் பந்தயத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது. இதேபோன்று வில்வித்தை காம்பவுண்ட் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோதி மற்றும் ரோஜா தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது. ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். குத்துச்சண்டைக்கான மகளிர் 75 கிலோ எடைப்பருவில் இந்தியாவின் லவ்லீனா தோல்வியை தழுவியதன் மூலம் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இதேபோன்று மற்றொரு வீராங்கனையான பர்வீன் ஹூடா வெண்கல பதக்கமும், மல்யுத்தம் போட்டியில் சுனில் குமார் வெண்கல பதக்கமும் வென்றனர். ஹாக்கியில் இந்திய அணி தென்கொரியாவை 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 81 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. அதேபோல் இந்திய அணி இதுவரை இல்லாத அளவில் ஒரே சீசனில் 18 தங்கம் வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம், பதக்கப் பட்டியலில் இந்தியா, 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 81 பதக்கங்களுடன் தொடர்ந்து நான்காம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் 316 பதக்கங்களுடன் சீனாவும், ஜப்பான் 147 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், தென்கொரியா 148 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Kokila

Next Post

காலையிலே சென்னையில் பரபரப்பு...! போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அதிரடியாக கைது...!

Thu Oct 5 , 2023
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று நாளை எட்டியது. தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது ஆனால் இந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் […]

You May Like