குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது.
நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விருதை இந்தியா வென்றுள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022 என்ற இந்த விருதை தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. நாடுகள் பிரிவில் இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.