fbpx

இந்தியன் 2 நெகடிவ் விமர்சனம்..!! ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா?

பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

 இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் நடிப்பில் வர்ம கலை மூலமாக லஞ்சத்தை ஒழிக்கும் சுதந்திர போராட்ட வீரர் கதையாக வெளியான இந்த படம் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2ம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது முதலே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்தியன் 2 படம் இன்று வெளியானது.

இந்தியன் 2 படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், படம் பார்த்த கமல் ஆதரவாளர்கள் மட்டுமே படத்தை, ஆஹா ஓஹோ என புகழ்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பொதுவான ரசிகர்கள், இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு, இந்தியன் தாத்தா உண்மையிலேயே ரசிகர்களை தான் கதற விட்டிருக்கிறார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இந்தியன் 2 படம் குறித்த பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மிக முக்கியமான ரசிகர்களின் புகாராக இருப்பது, இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பதுதான். வழக்கமாக இன்றைய தமிழ் படங்கள் இரண்டே கால் மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம்தான் அதிகபட்சமாக இருக்கும். ஆனால், 180 நிமிடங்கள், 4 வினாடிகள் என படத்தின் நேரம் நீண்டிருப்பது ரசிகர்களை பெரிய அளவில் சோர்வடைய செய்கிறது.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதாவது இந்தியன் 2 படத்தில், மொத்தமாக 20 நிமிடங்கள் காட்சியை குறைக்க முடிவு செய்திருக்கிறார். படத்தில்  ரசிகர்களை வெறுப்படை செய்யும் நீளமான காட்சிகள், தேவையற்ற காட்சிகளை நீக்கி விட சம்மதித்திருக்கிறார். அந்த வகையில் இனி 2 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே இந்தியன் 2 திரையில் ஓடும் என்ற ஒரு ரிலாக்ஸான தகவல் ரசிகர்களுக்கு வந்திருக்கிறது.

Read more | விம்பிள்டன் 2024 | ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் பேட்டன் மற்றும் ஹெலியோவாரா பட்டம் வென்றனர்..!!

Next Post

சொந்த வீடு கட்டணுமா..! 600 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்..! முழு விவரம்..!

Sun Jul 14 , 2024
build a own house in 600 square feet... ur dream to come ture... for that budget schedules

You May Like