இந்திய ராணுவத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது இதன்படி வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.03.2023 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பின்படி இந்திய ராணுவத்தில் கிளீனர், மெசஞ்சர், மெஸ் வெயிட்டர், பார்பர், வாசர் மென் மற்றும் குக் ஆகிய பணிகளுக்கு 135 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலை வாய்ப்புகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளில் சேர விரும்புவோரின் கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மேற்கு வங்காளம் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணிகளுக்கு மாதச் சம்பளமாக 18,000 ரூபாயிலிருந்து 56,900 ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய ராணுவத்தால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து வேலை வாய்ப்பிற்கு தேவையான ஆவணங்களையும் அதனுடன் இணைத்து மார்ச் மூன்றாம் தேதிக்குள் குரூப் கமாண்டர்,தலைமையகம் 22 இயக்கக் கட்டுப்பாட்டுக் குழு, பின்கோடு -900328 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை indianarmynic.n என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளவும் .