தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அதையும் தாண்டி இவர் மிகப்பெரிய கார் பைக் விரும்பியாக பிரபலமானவர். நடிகர் அஜித்குமார் ஆட்டோமொபைல் போல ஏரோநாட்டிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வமுடன் செயல்படுபவர். சென்னை எம்ஐடி-யை சேர்ந்த மாணவர் குழு இவர் தலைமையில் ஆலோசனை பெறப்பட்டு டீம் தக்க்ஷா என்ற பெயரில் இணைந்து செயல்பட்டனர். கடந்த கொரோனா காலகட்டத்தில் கூட இவர்கள் உருவாக்கிய டிரோன் தான் அரசுக்கு பல இடங்களை சானிடைஸ் செய்யவும் பல இடங்களை கண்காணிக்கவும் உதவியது.
இந்நிலையில் இவர்கள் தொடர்ந்து டிரோன்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரிக்க இந்த குழுவிற்கு ஆர்டர் வந்துள்ளது. இதற்காக ரூபாய் 165 கோடியை செலவு செய்யவும் இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது.
அதன்படி இந்த குழு அடுத்த சில மாதங்களில் இந்திய ராணுவத்திற்காக 200 டிரோன்களை தயாரித்து டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரோன்கல் எல்லாம் இந்திய ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காகவும் மருத்துவ மற்றும் அவசர பொருட்களை கொண்டு செல்லும் பணிக்காகவும் பயன்படுத்தலாம் என தெரிகிறது.