fbpx

JOBS | 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை.!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!!

JOBS: மத்திய அரசு வங்கியான இந்தியன் வங்கியில்(INDIAN BANK) காலியாக உள்ள தங்க நகை மதிப்பீட்டாளர்((GOLD JEWELERY APPRAISER) பணியிடங்களை அனுப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்தியன் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு தங்க நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி தங்க நகை மதிப்பீட்டாளர்(GOLD JEWELERY APPRAISER) பதவிக்கு(JOBS) விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்போர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 30 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்து இருப்பதோடு அந்தத் துறையில் 10 வருட அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு, டிசி, மதிப்பெண் சான்றிதழ், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து 10.04.2024 தேதிக்குள் இந்தியன் வங்கி வேலூர் மண்டல அலுவலகத்தில் அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More: ”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!

Next Post

ATM-இல் இப்படி ஒரு வசதியா..? இனி காத்திருக்க தேவையில்லை..!! ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!

Wed Apr 10 , 2024
இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டின் பொதுமக்களுக்கான பண பரிமாற்றத்தில் பல்வேறு வகையான மாறுதல்களை செய்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நாணய கொள்கை கூட்டத்தை நடத்தியது. இதில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பொருளாதார ரீதியிலான பல்வேறு வகையான மாறுதல்கள் குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டனர். மேலும், UPI வாயிலாக ஏடிஎம்கள் மூலம் பணத்தை அனுப்பும் வசதி குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதாவது, […]

You May Like