இந்திய கடலோர காவல் படையில் உள்ள 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
- என்ஜின் டிரைவர் – 01
- லஸ்கர் -1
- வரைவாளர் -1
- ஃபயர் மேன்/மெக் ஃபையர் மேன் – 01
- சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் -1
- மோட்டார் டிராஸ்போர்ட் ஃபிட்டர் – 01
- எலக்ட்ரிக்கல் ஃபிட்டர்: 01
- ஐசிஇ (ICE) -ஃபிட்டர் (ஸ்கில்டு) – 01
- அன்ஸ்கில்டு லேபர் – 01
- மல்டி டாஸ்கிங் ஸ்டாப் – 03
கல்வி தகுதி :
* என்ஜின் டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தகுதியுடன் என்ஜின் டிரைவருக்கன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும்.
*பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 வயது முதல் 32 வயதுக்குபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ஜின் டிரைவர், லஸ்கர், சிவிலியன் மோட்டார் மெக்கானிக் , ஐசிஇ ஃபிட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். மல்டி டாஸ்கிங் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். அரசு விதிகளின் படி அனைத்து பணியிடங்களுக்கும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு எழுத்து தேர்வு, தகுதித்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவர். ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2024 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி 25.11.2024 ஆம் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி :
The Commander Coast Guard Region (East)
Newar Napier Bridge Fort,
St George (po)
Chennai – 600009
Read more ; 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை.. பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா?