fbpx

TEJAS | பயிற்சியின் போது பாலைவனத்தில் விழுந்து நொறுங்கிய இந்திய ராணுவ விமானம்.!

இந்திய ராணுவத்தின் பாரத் சக்தி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட தேஜஸ் என்ற போர் விமானம் ஜெய்சால்மார் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் இலகுரக விமானமான தேஜஸ் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் நடைபெற்று வரும் ஊர் ஒத்திகை பயிற்சியின் போது ஜெய்சால்மார் பகுதியில் உள்ள பாலைவனத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது விமானி எந்தவித சேதமும் இன்றி பத்திரமாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறினார்.

இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேஜஸ் போர் விமானத்தின் முதல் விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவத்தின் பலனை பரிசோதிக்கும் வகையில் பாரத் சக்தி என்ற பெயரில் ராணுவ ஒத்திகை நடைபெற்று வருகிறது.

டி-90 (ஐஎம்) டாங்கிகள், தனுஷ் மற்றும் சாரங் கன் சிஸ்டம்ஸ், ஆகாஷ் ஆயுத அமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் ட்ரோன்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் பயிற்சியில் பங்கேற்றன. இந்திய ராணுவம் மேம்பட்ட தரைப் போர் மற்றும் வான்வழி கண்காணிப்பு திறன்களை இந்தப் பயிற்சி காட்டுவதாக அமைந்தது.

Next Post

TNGovt | அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அகவிலைப்படி 50% ஆக உயர்வு..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Tue Mar 12 , 2024
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46% உள்ள அகவிலைப்படியை 2024 ஜன.1ஆம் தேதி முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மக்கள் நலன் கருதி தமிழக அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் கடும் நிதி […]

You May Like