இந்திய அஞ்சல் துறையில் 21,000 க்கும் மேற்பட்ட அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2000 க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது. இவை விரைவில் அஞ்சல் துறையால் நிரப்பப்பட உள்ளது.
காலி பணியிடங்கள்: Gramin Dak Sevaks (GDS), Branch Postmaster (BPM), and Assistant Branch Postmaster (ABPM) எனமொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி: இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: இதற்கு 18 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருப்பவர்கள்விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: Assistant branch post master பதவிகளுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரையும்,Branch post master பதவிகளுக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
வயதுவரம்பு தளர்வுகள்: இதில் SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகள், PWD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள்,PwD மற்றும் OBC பிரிவினர்களுக்கு 13 ஆண்டுகள், PwD மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகள் என வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : இதில் விண்ணப்பிப்பதற்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: இதற்கு விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST, PWD, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கடைசி தேதி : மார்ச் 3 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும்.
Read more : நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை.. இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது..?