fbpx

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! Engineering முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த Technician (Diploma) Apprentices, Graduate Apprentices பணிக்கு 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரை சம்பளம் வழங்கப்படும். Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு ரூ.10,000 மாத உதவித் தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: IRCON INTERNATIONAL LIMITED

Also Read: வாகன ஓட்டிகளே… சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியாக சென்னை ஐஐடி, தமிழக அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி…!

Vignesh

Next Post

#India Covid: 24 மணி நேரத்தில் மொத்தம் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு தெரியுமா...? மத்திய அரசு தகவல்..‌

Sun Jul 31 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,673 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like