வட இந்தியாவில் தொடர்ந்து குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவி வருவதால் பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்திய ரயில்வே இன்று 244 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.

ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 8ஆம் தேதி புறப்பட வேண்டிய 83 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்கமான செயல்பாட்டு மற்றும் பொறியியல் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறது.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயணிகளின் வங்கி கணக்குகளில் பணம் திரும்ப செலுத்தப்படும். டிக்கெட் கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற கவுண்டருக்குச் சென்று பணத்தை திரும்ப பெறலாம். indianrail.gov.in/mntes என்ற இணையதளம் வாயிலாக எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அறிந்து கொள்ளலாம்.