இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..
லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.. அதில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. அதிலும், அசித்ரோமைசின் 500 மிகி மாத்திரை இந்தியாவில் அதிகம் நுகரப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரையாக உள்ளது.. அதிகபட்சமாக 7.6 சதவீதம் மக்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துகின்றனர் என்றும், அதைத் தொடர்ந்து செஃபிக்ஸைம் 200 மி.கி மாத்திரை (6.5 சதவீதம்) என்றும் லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆனால் அதிகளவு ஆண்டி பயாடிக் மாத்திரைகளை உட்கொள்வது ஆபத்தானது என்று கூறப்படுகிறது.. அதாவது ஆண்டிபயாடிக் திடீரென செயல்படுவதை நிறுத்தினால், ஒரு நபர் குணமடைவதற்குப் பதிலாக நோய்வாய்ப்படலாம். பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரித்து, மேலும் தொற்றுநோய்களை உருவாக்கும் வரை உடல் அதை உணராது, அதற்கு மருத்துவமனையில் அனுமதி கூட தேவைப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..
ஆண்டி பயாடிக் மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து..?
- கடுமையான மற்றும் தொற்று நோயின் அதிக ஆபத்து,
- வாந்தி, அதிக காய்ச்சல் போன்ற கடுமையான பக்க விளைவுகள்
- மருத்துவமனையில் அனுமதி
ஆண்டிபயாடிக் எதிர்ப்பை எவ்வாறு தடுப்பது? மருந்தை உட்கொள்ளும் போது மருத்துவரின் பரிந்துரையை மட்டும் பின்பற்றவும்.. நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றவும்.. தொடர்ந்து கைகளை கழுவி, நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்கவும்