fbpx

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் , மாணவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்… வெளியுறவுத்துறை எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரிவினை வாத வன்முறை செயல்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வசிக்கும்இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பு காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த  பிரிவினைவாத குழுவை கனடா அரசு ஏற்கவில்லை . அதே சமயம் தடுக்காமல் உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு 1980 மற்றும் 90களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தனி நாடு கோஷத்தை எழுப்பி பிரிவினைவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் கனடாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தலை தூக்கியுள்ள பின்னணியில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம அங்கு வசிக்கும் இந்தியர்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Post

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால்; சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை...!

Sat Sep 24 , 2022
கோவையில் பாஜகவினரின்வீடுகளில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் 9 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கோவை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அங்கிருக்கும் காவல்துறையினர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் […]

You May Like