பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாங்காக்கில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் கொல்கத்தா நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு இந்தியர் தன்னுடைய கைப்பையை நடைபாதையில் வைத்து இருந்ததாகவும், மற்றொருவர் அதை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து விமான பணிப்பெண் ஒருவர் இவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சண்டை குறித்து தாய் ஸ்மைல் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. சண்டை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வீடியோ தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.