fbpx

மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் படுமோசம்.. பாதிக்கு பாதி சரிந்தது..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..

ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில்,மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் பல பத்தாண்டுகளாக மோசமாகவே உள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நாட்டின் கிழக்குப் பகுதியின் வளர்ச்சி கவலைக்குரியதாகவே உள்ளது என்றும், குறிப்பாக மேற்கு வங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனி நபர் வருவாய் வெகுவாக சரிந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960-61ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் பங்கு 10.5% ஆக இருந்த நிலையில், அது தற்போது (2023-24ல்) 5.6% ஆக சரிந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், தனி நபர் வருவாயில் 1960-61ல் 3வது இடத்தில் மேற்கு வங்கம் இருந்ததாகவும், அப்போது தேசிய சராசரியைவிட மேற்கு வங்கத்தின் சராசரி 127.5% ஆக இருந்ததாகவும், அது தற்போது (2023-24ல்) 83.7% ஆக சரிந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்கள் சிறந்து விளங்கியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 இல் கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு தென் மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட கணிசமாக முன்னேறியுள்ளன என்றும், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களும் தற்போது (2023-24 இல்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30% பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read more ; மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு..!! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ரூ.10 லட்சம் அபராதம் – எச்சரிக்கை

English Summary

India’s richest and poorest states revealed: South rises, but what happened to Bengal?

Next Post

’உடம்புல ஒட்டு துணி கூட இருக்கக் கூடாது’..!! மனைவியை நிர்வாண பூஜைக்கு டார்ச்சர் செய்த கணவன்..!! நண்பனின் பேச்சை கேட்டதால் விபரீதம்..!!

Wed Sep 18 , 2024
Investigation revealed that Prakash kept insisting to the girl's family to perform Nirvana Puja to fulfill her wishes.

You May Like